ETV Bharat / state

திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - Naam thamizhar party

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அரிவாளால் வெட்டிய அடையாளம் தெரியாத கும்பலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

சுதாகர்
author img

By

Published : Jun 29, 2019, 6:00 PM IST

சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(31). இவர் நாம் தமிழர் கட்சியின் நகர கிளை செயலாளராக இருந்துவருகிறார். நேற்று வீட்டின் அருகே அவர் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்த சுதாகரின் தாயார்
காயமடைந்த சுதாகரின் தாயார்

சண்டையை தடுக்க வந்த சுதாகரின் தயாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா விற்பனை செய்வதை காட்டிக் கொடுத்ததால், அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் சுதாகரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு நடந்த இடம்

Intro:திருவேற்காட்டில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.
Body:திருவேற்காடு, மேல் அயனம்பாக்கம், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர்(31), நாம் தமிழர் கட்சியின் நகர கிளை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுதாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டினார்கள் இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சுதாகர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார் இதனை கண்டதும் அவரது தாய் ராணி மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தடுக்க முயன்றனர். இதில் மர்ம நபர்கள் மீண்டும் வெட்டியதில் சுதாகரின் தாய் ராணிக்கும் தலையில் வெட்டு விழுந்தது இதனைக்கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து வெட்டுக்காயமடைந்த சுதாகர் அவரது தாய் ராணி ஆகியோர் அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் :
இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளது முட்புதர்கள் நிறைந்த காணப்படும் இடத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இதுகுறித்து சுதாகர் திருவேற்காடு போலீசாரிடம் அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததன் பேரில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த சிலரை கைது செய்தனர். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுதாகரை தீர்த்துக் கட்டும் நோக்கில் மர்ம கும்பல் வந்து அரிவாளால் வெட்டி உள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடி தடுத்ததால் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு சிறுவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கத்தை கற்று கொடுத்து விடுகின்றனர். குடும்பத்தினரை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்த சுதாகரை தற்போது வெட்டி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.