கடந்த சில வாரங்களில் தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் சுமார் 40 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளிலும் முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுடன் பழகிய மற்ற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தார், அவர்கள் உடன் பணிபுரிவோர், பயணம் செய்தோர் என பலருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் சமூக இடைவெளியின்றி பணி செய்வது, வைரஸ் தொற்று பரவலுக்கு மென்மேலும் வழிவகுக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை 50 சதவிகிதத்திற்கு பதிலாக 33 சதவிகிதம் பணியாளர்களை மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தாகிறது?