ETV Bharat / state

பள்ளி ஆசிரியர்களுக்கு 'குட் நியூஸ்'.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - to disburse outstanding salaries

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 17, 2022, 6:41 PM IST

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 32 மாவட்ட கல்வி அலுவலகங்களின்கீழ் வரக்கூடிய அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதனால் கூடுதலாக 32 கல்வி மாவட்டங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக ரீதியாக செய்யப்பட்ட மாற்றங்களால் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்க காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு இன்று (நவ.17) அனுப்பி உள்ள கடிதத்தில், 'புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின்கீழ் வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கருவூலத்தில் சம்பள பட்டியலை அளித்து உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், எந்தவித காலதாமதமும் ஏற்படக்கூடாது. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள் சம்பளம் பெற்று வழங்கவேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வன உயிரினம், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழும் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.