ETV Bharat / state

பொதுமக்களே ஆன்லைன் வழியே ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை இதோ! - Documents creating method in online

சென்னை:  எளிய முறையில் பொதுமக்களே தங்களது ஆவணங்களை ஆன்லைன் வழியே உருவாக்கம் செய்ய தமிழ்நாடு பதிவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை உருவாக்கம்

author img

By

Published : Jul 28, 2020, 1:46 AM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொதுமக்கள் ஸ்டார் 2.0 ஆன்லைன் வழியே தாங்களே ஆவணங்களை உருவாக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 2018இல் பிப்ரவரி 12ஆம் தேதியன்று தொடங்கிவைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் மைய நோக்கம், குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதாகும். இந்த நோக்கத்திற்கேற்ப மென்பொருளில் ”பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை” உருவாக்கப்பட்டுள்ளது.

”https://tnreginet.gov.in” என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை (Login) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பின்பு அதற்குரிய பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உள்நுழைவிற்குள் சென்ற பின் பதிவு செய்தல் – ஆவணப் பதிவு – ஆவணத்தினை உருவாக்குக என்பதைத் தெரிவுசெய்ய வேண்டும்.

ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்ளலாம். ஆவணத்தை உருவாக்க கீழ்கண்ட விவரங்களை உட்புகுத்த வேண்டும்.

  • ஆவணத்தின் தன்மை தாங்கள் பதிவுசெய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை அதாவது அந்த ஆவணம் விற்பனை ஆவணமா, தான செட்டில்மெண்ட் ஆவணமா, குத்தகை ஆவணமா, அடமான ஆவணமா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும்.
  • முன் ஆவண விவரங்கள்: சொத்தினை விற்பவர் அச்சொத்தினை வாங்கிய முன் ஆவண விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பூர்வீக சொத்தாக இருப்பின் இதனைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
  • எழுதிக்கொடுப்பவர் விவரங்கள்: எழுதிக்கொடுப்பவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்திலிருந்தும் இவ்விவரங்களை நகல் (Copy) செய்யலாம்.
  • எழுதிப்பெறுபவர் விவரங்கள்: எழுதிப்பெறுபவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்திலிருந்தும் இவ்விவரங்களை நகல் (Copy) செய்யலாம்.
  • பொது அதிகாரம் முகவர் மற்றும் சாட்சிகளின் விவரங்கள்: எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதிப்பெறுபவர் பொது அதிகாரம் அளித்திருப்பின் முகவரின் பெயர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் குறைந்த பட்சம் இரு சாட்சிகளின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • சர்வே எண் மற்றும் பரப்பளவு சொத்து விவரத்தின் கீழ் சர்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். கைமாற்றுத் தொகை அது செலுத்தப்பட்ட விவரத்தினையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
  • சொத்தின் நான்கு எல்லைகள் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • கட்டடம், கட்டடம் இருப்பின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • கட்டண விவரங்கள் மேலே குறிப்பிட்ட விவரங்களை நிரப்பிய உடன் அரசுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும். கட்டணங்களை இணையதளம் வழி செலுத்தலாம்.
  • அச்சுப் பிரதி தற்போது ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இதனை அச்சுப்பிரதி எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். தவறான விவரங்களை இணையதளத்தில் சென்று திருத்திக் கொள்ளலாம். பின்பு வெள்ளைத் தாளிலோ அல்லது முத்திரைத் தாளிலோ அச்சுப் பிரதி எடுத்துப் பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.
  • முன்பதிவு செய்தல் ஆவணத்தினை உருவாக்கிய பின் ஆவணப்பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை இணையதளத்தின் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆவணத்தினைத் தாக்கல் செய்து காத்திருக்காமல் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட எளிய முறையிலான ஆவண உருவாக்கும் வசதியைப் பயன்படுத்தி தங்களது ஆவணங்களை ஆன்லைன் வழி தாங்களே உருவாக்கி பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.