சென்னை: காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கனடா நாட்டின் வின்னிபெக் நகரில் கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில், சுமார் 50 நாடுகளிலிருந்து 8,500க்கும் அதிகமான காவல் மற்றும் தீயணைப்புத் துறை சார்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு காவல் துறையின் தடகள அணியைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஏ.மயில்வாகனன், காவல் ஆய்வாளர்கள் இராஜேஸ்வரி, எஸ்.சரவணப் பிரபு, கே.கலைச்செல்வன், ஆர்.சாம் சுந்தர், என்.விமல் குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கே.பாலு ஆகியோரும், தலைமைக் காவலர்கள் பி.சந்துரு, எஸ்.சுரேஷ் குமார், சி.யுவராஜ், டி.தேவராஜன், மகளிர் தலைமை காவலர்கள் எம்.லீலாஸ்ரீ, ஆர்.பிரமிளா மற்றும் டி.தமிழரசி ஆகிய 15 பேர் பல்வேறு போட்டிகளில் பொதுப்பிரிவில் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றவர்கள் 15 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்கள்!
தமிழ்நாடு காவல் துறை தடகள அணி ஓரே ஆண்டில் அதிகபட்ச பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறை. இந்த வீரர்கள், அரசின் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கங்கள் வென்ற 15 காவல் துறையினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 16) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், ‘காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023’ போட்டியில், அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட எஸ்.சிவா, ஆர்.தினேஷ், வி.தினேஷ் மற்றும் ஜி.எஸ்.ஸ்ரீது ஆகிய 4 காவலர்கள் 6 தங்கப் பதக்கங்கள் மற்றும் 7 வெள்ளி பதக்கங்கள் என 13 பதக்கங்களை வென்றுள்ளனர்.
பதக்கங்கள் வென்ற காவலர்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின்போது, காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) எச்.எம்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற “காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023” போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். pic.twitter.com/DMIQKBUnkE
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற “காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023” போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். pic.twitter.com/DMIQKBUnkE
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 16, 2023கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற “காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023” போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். pic.twitter.com/DMIQKBUnkE
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 16, 2023
இதையும் படிங்க: "நீங்க கொடி ஏத்துறதை பார்க்கனும்" மாணவனின் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!