ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கும் நோக்கில், தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்ட செயலிதான் 'காவலன் எஸ்ஓஎஸ்' (KAAVALAN SOS) . இந்தச் செயலி மூலம் பெண்கள் உள்பட அனைவரும் இரண்டுக்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், பெண்கள் தனியாக இருக்கும் போதோ, அல்லது சமூக விரோதிகளால் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சும் போதோ உடனடியாக செயலியிலுள்ள எஸ்ஒஎஸ் பட்டனை அழுத்தினால் போதும்.
உடனடியாக உங்கள் செல்போன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் இடத்திற்கு அருகாமையிலுள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு காவல் துறையினரால் உறுதி செய்யப்படும். ஆனால், பலருக்கும் இச்செயலி பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்பதால், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மத்தியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது' - கமல்ஹாசன் அறிவிப்பு