தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஐந்தாயிரத்து 90 ஒன்றிய வார்டு உறுப்பினர், ஒன்பதாயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.
திமுக 243 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும் அதிமுக 214 இடங்களையும் கைப்பற்றின. இதேபோல், இரண்டாயிரத்து 99 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களை திமுகவும் ஆயிரத்து 781 இடங்களை அதிமுகவும் கைப்பற்றின.
இந்நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே ஒன்றிய தலைவர், ஊராட்சித் துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் 11ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: எழுந்தது யார்? விழுந்தது யார்?