சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்யேக கரோனா சிகிச்சை வார்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கோவிட் -19 குழந்தைகள் பிரத்யேக வார்டு
முன்னதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) உற்பத்தி நிலையம். திரவ நிலை மருத்துவ பிராண வாயு கொள்கலன் ஆகியவற்றை பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் சுப்ரமணியன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறந்துவைத்தனர்.
பின்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கோவிட் -19 குழந்தைகள் பிரத்யேக வார்டு, தீவிர சிகிச்சை பிரிவினை தொடங்கிவைத்து பார்வையிட்டனர். பிரத்யேக கரோனா வார்டில் 100 சாதாரண படுக்கைகள், 40 அவசர சிகிச்சை படுக்கைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொது மருத்துவத்துக்கும் முக்கியத்துவம்
மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிவறையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளரை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பொது மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான பிரத்யேக கரோனா சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: 'பில்டிங் இல்ல... பிளான் இருக்கு..' - விரைவில் எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை