மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் கரோனா தடுப்பு, சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா பணியில் உள்ள மருத்துவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
மேலும், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், இணை இயக்குநர் மரு. பார்த்திபன், மாநில உரிமம் வழங்கல் அலுவலர் மரு. பிச்சையகுமார், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. மணவாளன், பொதுப்பணித் துறை மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...ஜூலை 20ஆம் தேதி தொடங்கவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்!