ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் - பாஜக முருகன் - Chennai district News

சென்னை: விநாயகர் சிலைகளை நிறுவி, தகுந்த இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN govt should give permission for Ganesha Chaturthi festival

author img

By

Published : Aug 14, 2020, 7:55 PM IST

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொது இடங்களில் காவல்துறை அனுமதியோடு விநாயகர் சிலைகளை நிறுவி மக்கள் வழிபடுவது, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

பின்னர் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆங்காங்கே கடல் , ஏரி, குளங்களில் கரைப்பார்கள். இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு விநாயகர் ஊர்வலத்தை நாங்களே கைவிடுகிறோம். விநாயகர் சிலைகளை நிறுவி வழக்கம் போல் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தமிழ்நாடு தலைமைச் செயலரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்கள். அத்துடன் வழிபாட்டிற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் நேற்று (ஆக.13) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் சேர்த்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் பல்வேறு பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியே வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில அரசு சிறு கோயில்களை எல்லாம் திறந்து கடவுளை வழிபடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இத்தகைய நிலையில் விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை நீக்க வேண்டும்.

மேலும்,1983-க்கு முன்பிருந்தே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை தமிழ்நாடு அரசு அனுமதிப்பது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் தகுந்த இடைவெளியோடு, விழிப்புணர்வோடு விநாயகரை வணங்குவார்கள் என்பது உறுதி என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.