சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை விவாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
'இலங்கைத் தமிழர் ஆதரவற்றவர்கள் அல்ல':-
மேலும், இது தொடர்பாக பேசிய முதலமைச்சர், 'தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும். மேலும், இலங்கைத் தமிழர் ஆதரவற்றவர்கள் அல்ல.
அவர்களுக்கு நாம் இருப்போம். அவர்கள் நலனில் அரசு உறுதுணையாக இருக்கும்' எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று(ஆகஸ்ட் 29) அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவை, ஆளுநரின் ஆணைப்படி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்: சொல்லில் ஏற்பட்ட மாற்றமல்ல - சிந்தனைச் செல்வன்!