சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கை வழங்கிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் அதில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தது. அறிக்கையின் படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் கே.எஸ்.சிவக்குமார், அப்போலோ மருத்துவக்குழும மருத்துவர்கள் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவையும் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதன்படி சட்ட ஆலோசனை பெற்று மேல்நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே போன்று விசாரணை ஆணைய அறிக்கையின் சுருக்கம் மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் வழங்கப்பட்டு, அத்துறையால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவை குற்றம் சாட்டும் ஆணையம் - ஓ.பி.எஸ். இணைப்பு சாத்தியமா?