சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, வழங்குவது குறித்து அலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கபட உள்ளது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு 15 வண்ண டிசைன்களில் வேட்டி சேலைகள் வழங்கபட உள்ளது, பெண்களுக்கு 10 புதிய வகையில் வடிவமைக்கபட்ட சேலைகளும். ஆண்களுக்கு 5 வண்ணங்களில் வடிவமைக்கபட்ட வேட்டிகள் வழங்கபட உள்ளது. இவை 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் பொது மக்களுக்கு வழங்க திட்டமிடபட்டுள்ளது.
பல வண்ணங்களில் வடிவமைக்கபட்ட ஆடைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'இதுவரை இல்லாத அளவுக்கு ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது’ - அமைச்சர் பெரியசாமி