இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்று கலந்தாய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உயர் அலுவலர்களுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி உத்தரவினை பிறப்பிக்கிறேன்.
அதன்படி, 31.03.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் பணியில் தொடர, தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும். உலகமெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் அளிக்கவேண்டும். விழித்திருப்போம். விலகியிருப்போம். வீட்டிலேயே இருப்போம், கரோனாவை வெல்வோம்" என அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 கோடி மக்களைக் காப்பாற்றுமளவிற்கு தமிழ்நாடு அரசிடம் நிதியுள்ளதா?