தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காணொலி வாயிலாக மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது. சங்கதத் தலைவர் மருத்துவர் செந்தில், அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதில், "நான்கு வருடத்திற்கு மேலானப் போராட்டத்திற்குப் பின், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு பணப்படி வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.
அதேவேளை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் எந்த பாகுபாடுமின்றி பணப்படியை உயர்த்தி தரவேண்டும். மேலும் பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மருத்துவர்களுக்கும் அவர்களது துறை சார்ந்த பாகுபாட்டை தளர்த்தி சமமான பணப்படியை வழங்கிட வேண்டும்.
இதை அமல்படுத்தும் விதமாக அரசாணை 293இல் மாற்றம் வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா?