சென்னை: நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதில், ஆகஸ்ட் கடைசி வாரம் வாக்கில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும், துறை ரீதியாக நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.
தொழில் துறை... முதலீடு!
அதேபோல் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, பொருளாதார ரீதியாகத் தொழில் முதலீட்டை ஈர்ப்பது, மேகதாது பிரச்சினையில் சட்ட ரீதியாக எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தொழில் துறை தொடர்பான முக்கியத் திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: 'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'