ETV Bharat / state

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் - makara jyothi

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 8:16 PM IST

சென்னை: சபரிமலை சிறப்புப் பேருந்துகள் தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (நவ.16) வெளியிட்ட அறிக்கையில், 'கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழ்நாட்டில் இருந்து ஐயப்பப் பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை (நவ.17) முதல் அடுத்த ஆண்டு ஜன.20 வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

இந்த ஆண்டு பக்தர்கள் கூடுதலாகப் பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாகப் பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in, மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 94450 14452, 94450 17793, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்படி வசதியினை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சற்றுநேரத்தில் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.