சென்னை: தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு அரசாணையில், "தமிழர் திருநாள் தைப் பொங்கல் 2024, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும்" எனத் தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்து உள்ளது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்குத் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பின் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பினை தமிழக அரசு அரசாணை மூலம் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்