ETV Bharat / state

கரோனா விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவை அலட்சியப்படுத்திய  தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jun 16, 2020, 1:21 AM IST

சென்னை: சென்னையில் கரோனாவால் உயிரிழந்த நபர்களின் இறப்பு பட்டியலை சுகாதார துறை மற்றும் மாநகராட்சித் துறை மத்திய அரசுக்கு அனுப்ப தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN govt and Municipal corporation refused to submit coronavirus death report to Central Govt

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இதனால் இப்பெருந்தொற்றால் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது வருகிறது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347ஆக உள்ளது.

சிலநாள்ளுக்கு முன் சுகாதாரத் துறை வெளியிட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மாநகராட்சி வெளிட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் முரண்பாடாக இருந்தது.

இதனால் மக்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை போக்க முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஒரு குழுவை அமைத்தார்.

வழக்கப்படி அனைத்து மாநகராட்சியும் ஆண்டு இறுதியில் இறந்தவர்களின் சான்றுகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சான்றுகளை தனியாக தயார் செய்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி நேற்று கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சான்றுகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி சமர்ப்பிக்க தவறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மத்திய அரசுக்கு மாநகராட்சி கரோனாவால் உயிரிழந்த 71 நபர்களுடைய இறப்பு சான்றிதல் மட்டுமே இதுவரை சமர்ப்பிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 124 நபர்களுடைய இறப்பு சான்றுதல் மாநகராட்சிக்கு சுகாதாரத் துறை அளித்தும் இதுவரை கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளது. அது மட்டுமில்லாமல் 320 நபர்களின் இறப்பு விவரத்தை தயார் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது முறையாக பதிலளிக்கவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.