ETV Bharat / state

சிறிய கோயில்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி! - திங்கள்கிழமை முதல் மாநகராட்சி கோயில், தேவாலாய திறக்க அனுமதி

சென்னை: ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறிய திருக்கோயில்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள்க்கிழமை முதல் மாநகராட்சி கோயில், தேவாலாய திறக்க அனுமதி...!

author img

By

Published : Aug 8, 2020, 10:38 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. வைரஸ் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டுவருகிறது.

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் திங்கள்கிழமை (ஆக. 10) முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டும்.

அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் திங்கள்கிழமை (ஆக. 10) முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...மனித பால் வங்கிகள்: தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உயிரின் ஊட்டம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.