ETV Bharat / state

’வீட்டின் பெரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்’ - ஆளுநர் வேண்டுகோள்

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், இச்சூழலை சமாளித்து வரவும், கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடவும் அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை தமிழ்நாடு மக்கள் அனைவரும் உடனடியாக பின்பற்றத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்
author img

By

Published : Apr 8, 2021, 6:02 PM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா தற்போது மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை, முக்கியமாக வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை சுத்தமாகப் பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தற்போதைக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அதற்கான மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பாராட்டியுள்ள அவர், இச்சூழ்நிலையை சமாளித்து வரவும், கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடவும், அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை அனைவரும் உடனடியாக பின்பற்றத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் கடுமையாகும் நெறிமுறைகள்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.