தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை காலமானார். தமிழிசை தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதற்காக அவரது உடல் தெலங்கானாவிலிருந்து இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.
சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌவுந்தரராஜனின் வீட்டில் கிருஷ்ணகுமாரி அம்மாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழிசை சௌவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது - வானதி சீனிவாசனுக்குப் பதிலளித்த பிடிஆர்