கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் இன்று (செப்.1) முதல் வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திறக்கப்படுகின்றன. இதனையொட்டி ஐந்து வணிக வளாகங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஏராளமான பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் மும்முரமாகச் செயல்பட்டனர்.
வணிக வளாகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- முகமூடிகள் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
- ஆரோக்ய சேது செயலியைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- எச்சில் துப்புவதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.
- கரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
- மால்களில் நுழைவாயில் உடல் வெப்ப பரிசோதனை செய்வது, கட்டாயம் சானிடைசர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மீதான தடை தொடரும்.
- முகமூடிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மால்களுக்குள் எல்லா நேரங்களிலும், முகமூடிகள் அணிய வேண்டும்.
- கோவிட்-19 குறித்த விளம்பரம், விழிப்புணர்வுப் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும்.
- சரக்குகள் கொண்டுவருபவர்களுக்கு உள்நுழைவு, வெளியேறும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
- கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சரியான விலை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்
- மால்களில் குழந்தைகள் விளையாடும் பகுதி மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!