இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளதாவது:
”பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைகான நுழைவுத்தேர்வு திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். மக்களாட்சி மாண்பிற்கு மதிப்பளித்து, மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய மாற்றங்களைச் செய்து, உடனடியாக உத்தரவு வெளியிட்டதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வி ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பித்து குறிப்பிட்டப் பாடப் பிரிவைக் கோரும் மாணவர்கள் அனைவரும் அவர்கள் கோரும் பாடப்பிரிவில் சேர்க்கப்படவும், கூடுதல் வகுப்புகள் தொடங்கவும் அரசுப் பள்ளிகளுக்கு உரிய அனுமதி வழங்கிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.