ETV Bharat / state

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு - ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அmரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை
அரசாணை
author img

By

Published : Nov 1, 2021, 8:02 PM IST

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு இன்று (நவ.1) ஆணை வெளியிட்டுள்ளது. அதில், " தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110விதி எண் கீழ், ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி 31.03.2021 வரை 5 சவரன் வரை நகைக்கடன் பெறப்பட்ட விவரங்கள் கோரப்பட்டது.

16 லட்சம் கடன்தாரர்கள் பயனடைவர்

அதனடிப்படையில், 31.03.2021 வரை நிலுவையில் இருந்த தொகை ரூ.17,114.64 கோடி என்று கணக்கிடப்பட்டது. அதில் சில கடன்தாரர்கள் தங்களது நிலுவைத் தொகையை பகுதியாக செலுத்தியது, நகைக்கடன் தள்ளுபடிக்கு பொருந்தாத நபர்களை நீக்கிய பின்னர், நிலுவையில் உள்ள 6 ஆயிரம் கோடி ரூபாய் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலம் 16 லட்சம் நகைக்கடன்தாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால், தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 01.04.2021 ஆம் நாள் முதல் இன்று வரை அதற்குரிய வட்டியை அரசு ஏற்றுக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையை 100 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.