ETV Bharat / state

‘நீட் குறித்த மத்திய அரசின் கேள்விக்கு பதில் அனுப்பியுள்ளோம்’ - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

neet bills  central question about neet bills  ma subramanian  nhm scheme  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா சுப்பிரமணியன்  நீட் குறித்து மத்திய அரசு கேள்வி  மக்களை தேடி மருத்துவம்
மா சுப்ரமணியன்
author img

By

Published : Aug 7, 2022, 1:03 PM IST

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ பெட்டகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் நேற்று (ஆக. 6) வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “மக்களை தேடி மருத்துவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில், 74.92 விழுக்காட்டினருக்கு பரிசோதனையும், 83 லட்சத்து 23 ஆயிரத்து 723 பேருக்கு மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 706 பேர் மருத்துவ பெட்டகம் பெற்றுள்ளனர். கிராமப்புற மக்களுக்காக இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்களுக்கு மேல் பணியில் உள்ளனர். 19 ஆயிரத்து 535 பேரை இந்த திட்டத்திற்கு முழுவதுமாக செயல்படுத்தி வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்த திட்டதிற்கக்காக NHM (National Health Mission) நியமிக்க உள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் மருத்துவமனைகளில் செவிலியர்கள் குறைபாடு இருப்பது உண்மைதான். தற்போது இந்த காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான நேர்காணல்கள் சென்று கொண்டிருக்கின்றன. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களில் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள்.

நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் 16 வகையான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசனை செய்து அதற்கான பதில்கள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நீட் விலக்கு கிடைக்கும் என நம்புவோம்.

கேரளாவில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவதற்கு உள்ள 13 எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வழியே வரும் மக்களுக்கு கைகள் மற்றும் முழங்காலுக்கு கீழே ஏதேனும் பருமன் போல் உள்ளதா என்பது பரிசோதனை செய்யப்படு வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.