ETV Bharat / state

"நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருதிற்கு விண்ணப்பிக்கலாம்"- தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது

சென்னை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விரு
Kabir puraskar award announcement
author img

By

Published : Oct 25, 2020, 2:49 AM IST

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருது, ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில்) இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.

இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல், மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறைய 20 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரத்திற்கான காசோலை, தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

வரும் 2021 ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்" எனக் குறிப்பிட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.