ETV Bharat / state

இன்றுமுதல் புதிய தளர்வுகள் - எதற்கெல்லாம் அனுமதி - andhra karnataka bus reopen

திரையரங்குகளுக்கு அனுமதி, கல்லூரிகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி எனப் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

TN government
புதிய தளர்வுகள்
author img

By

Published : Aug 23, 2021, 7:33 AM IST

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் 12ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதற்கெல்லாம் அனுமதி

  • செப்டம்பர் 1ஆம் தேதிமுதல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்
  • அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி
  • 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்
  • அனைத்துப் பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதி
  • உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்பட அனுமதி
  • இதுவரை இரவு 9 மணிவரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகள், இன்றுமுதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
  • அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி.
  • நீச்சல், குளங்கள் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக மட்டும் 50 விழுக்காடு பயிற்சியாளர்களுடன் அனுமதி
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ சேவை இன்றுமுதல் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.