ETV Bharat / state

ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறக்கலாம் - அரசு அனுமதி - TN Govenment grants permision to resume barber shops at rural ares

சென்னை: ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தமைலைச் செயலகம்
தமிழ்நாடு தமைலைச் செயலகம்
author img

By

Published : May 18, 2020, 6:22 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறு குறு நிறுவனங்கள் தொடங்கி, உணவகங்கள், கடைகள் வரை அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு, பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த 24.03.2020 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று குறையக் குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் 19.05.2020 அன்று முதல் முடி திருத்தும் நிலையங்களை இயக்கலாம்.

இந்த முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முகக்கவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு உபயோகித்து கை கழுவுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபத்திற்கு காங்கிரஸ் தான் காரணம்' - யோகி ஆதித்யநாத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.