ETV Bharat / state

+2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவப்படிப்பில் சேர்க்கை; அரசு உறுதி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ANBIL MAHESH POYYAMOZHI
+2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவப்படிப்பில் சேர்க்கை; அரசு உறுதி
author img

By

Published : May 23, 2021, 9:43 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்த, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான இன்று (மே 23) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர்.

இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், கரோனா நோய்த் தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கருத்துகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் இறுதி நிலைப்பாட்டை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து ஒன்றிய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு கூடாது. வழக்கம் போல பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு கூடாது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.