ETV Bharat / state

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3000 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பழனிசாமி
பழனிசாமி
author img

By

Published : Jul 2, 2020, 6:49 PM IST

வழக்கறிஞர்களின் நலன் கருதி, மறைந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் 1987ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5.25 லட்சமாக உயர்த்தி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2012ஆம் ஆண்டு வழங்கினார். இதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நிதியை ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன் பின்னர், இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒருசிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இது போன்று வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.