சென்னை: கோவிட்-19 தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம்.இ.க்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ்நாடு அரசு கோரியது.
அதன்படி, நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்ற கூட்டத்தில் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தச் சவாலான காலங்களில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வங்கி சமூகத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், "மூன்று வார காலப்பகுதியில், நேர்மறை விகிதம் 20 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடாகவும், தினசரி வழக்கு சுமை சுமார் 1500 வழக்குகளிலிருந்து 200 வழக்குகளாகவும் குறைந்துள்ளது.
ஏறக்குறைய 80 விழுக்காடு கடன் வங்கிகளிடமிருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தில் வங்கிகளின் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மேம்பட்ட பொருளாதாரங்களின் விஷயமல்ல, கடனின் பெரும்பகுதி பொது பத்திர சந்தையில் இருந்துவருகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, அமைப்புசாரா துறை மற்றும் எம்.எஸ்.எம்.இ.களில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தைப் பெரும் அளவில் பாதித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பொருளாதாரத்திற்கு எம்.எஸ்.எம்.இ துறை முக்கியமாக விளங்குகிறது.
எம்.எஸ்.எம்.இ.களுக்கு பெருவணிகங்களைப் போன்ற மறுசீரமைப்பு அல்லது பல்வகைப்படுத்தும் ஆடம்பரம் இல்லை, வங்கிகளின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. மாநில,மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் எம்.எஸ்.எம்.இ.களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
எம்.எஸ்.எம்.இ. துறைக்கு வழங்கப்பட்ட ஆதரவின் தாக்கத்தை சிறப்பாக மதிப்பிடுவதற்காக, அத்துறைக்கு கடன் வழங்குவது தொடர்பான தரவுகளை அடிக்கடி இடைவெளியில் இணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
எம்.எஸ்.எம்.இ.களை ஆதரிப்பதற்காக ரிசர்வ் வங்கி, அரசு அறிவித்த திட்டங்கள், தளர்வுகள் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனால் இறுதி பயனர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.