ETV Bharat / state

சிட்லப்பாக்கம்-முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல-அமைச்சர் விளக்கம்

author img

By

Published : Sep 18, 2019, 2:48 PM IST

Updated : Sep 18, 2019, 3:14 PM IST

சென்னை: சிட்லப்பாக்கம்-முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

minister_thangamani

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் சேதுராஜ் மின் கம்பம் விழுந்து உயிரிந்ததது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த விபத்துக்கு மின்துறைதான் காரணம் என்ற செய்தி தவறானது; அவ்வழியாகச் சென்ற லாரி இடித்து மின் கம்பம் கீழே விழுந்ததுதான் உண்மை என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதிவு செய்யப்படும் புகார்களுக்கு மின்சார வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த மின்கம்பம் பழுதடைந்ததாக எந்தப் புகாரும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் கூறினார். காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்களைத் தேடி வருவதாகவும், விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், முகலிவாக்கம் விபத்து கூட தங்களுக்குத் தெரியாமல் வேறு யாரோ பள்ளம் தோண்டியதால் நிகழ்ந்தது என்றும், பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

1912 என்ற புகார் எண்ணில் மின்துறை தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று கூறிய அமைச்சர், சேவைகளுக்கு மின் துறை ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்குமாறும் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

இதையும் படிங்க...

'முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்து 341 கோடி ரூபாய் முதலீடு...!' - அமைச்சர் பெஞ்சமின்

Intro:Body:*சிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல : மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்*
_____
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

சிட்லபாக்கம் இளைஞர் சேதுராஜ் மின் கம்பம் விழுந்து உயிரிந்ததது வருத்தம் அளிக்கிறது.

இந்த செய்தி தவறானது.
ஆனால்,இது வரை மின் கம்பம் சேதம் அடைந்ததாக புகார் வரவில்லை.
அந்த வழியாக சென்ற லாரி இடித்து மின் கம்பம் விழுந்தது தான் உண்மை.

லாரி இடித்து மின்கம்பம் சேதம் அடைந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.

மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த மின்கம்பம் பழுதடைந்த தாக எந்த புகாரும் கிடையாது.

காவல் துறையினர் சிசி டிவி ஆதாரங்களை தேடி வருகிறோம்.
விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முகளிவாக்கம் விபத்து கூட எங்களுக்கு தெரியாமல் வேறு யாரோ பள்ளம் தொண்டியதால் நிகழ்ந்தது.

பள்ளம் தோண்டிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது

1912 புகார் எண்ணில் மின் துறை தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மின் துறை ஊழியர்கள் சேவைகளுக்கு பணம் கேட்டால் உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Visual sent by live Conclusion:
Last Updated : Sep 18, 2019, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.