ETV Bharat / state

இஸ்லாமிய கட்சிகளுக்குத் தொகுதியை குறைத்த திமுக!

author img

By

Published : Mar 1, 2021, 6:27 PM IST

Updated : Mar 1, 2021, 9:43 PM IST

ஐயூஎம்எல்-3, மமக-2
ஐயூஎம்எல்-3, மமக-2

18:12 March 01

சென்னை: திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று (பிப். 28) நடைபெற்ற நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 1) ஐயூஎம்எல், மமக உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்லாமிய கட்சிகளுக்குத் தொகுதியை குறைத்த திமுக!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு (ஐயூஎம்எல்) மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதில் ஐயூஎம்எல் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும், அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சிக்கு, இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் திமுக கட்சி கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முழு வீச்சில் நடத்திவருகின்றது. 

இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீடு குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இரண்டு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

5 லிருந்து 3 ஆக குறைவு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொய்தீன், "திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்தமுறை போட்டியிட்ட ஐந்து தொகுதிகள் எங்கள் கட்சி சார்பாக கேட்கப்பட்டது. 

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதாலும் நாங்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் இருந்த தேசிய கட்சி என்பதால் தமிழ்நாட்டிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். 

மேலும், நாங்கள் பலம்பெற்ற எங்களுக்கு விருப்பமான 25 தொகுதிகள் பட்டியலை கொடுத்து எந்தத் தொகுதியில் போட்டி என்பது குறித்து பிறகு முடிவுசெய்யப்படும்" என்றார்.

கடந்தமுறை போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. 

மமக: 2016-4 டு 2021-2

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. சின்னம், எந்தத் தொகுதியில் போட்டி என்பது பிறகு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட மமக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : Mar 1, 2021, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.