ETV Bharat / state

இரண்டு தேர்தல்களிலும் கையில் மை வைக்கப்படுமா? - சத்யபிரதா சாஹூ விளக்கம் - TN EC ceo explains on voting

சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் வழக்கம்போல மை வைக்கப்படும் என்று  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

சத்யபிரதா சாஹூ
author img

By

Published : Apr 13, 2019, 8:10 PM IST

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஒரே நேரத்தில் வாக்குச் சாவடியில் விரல் மை வைப்பதில் பல்வேறு குழப்பம் மக்களிடையே உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழக்கம்போல் ஆள்காட்டி விரலிலும், பின்னர் மே 19ஆம் தேதி நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்", என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.04.19

வாக்காளர்களுக்கு வாக்களித்தமைக்கான மை விரலில் இருகட்ட தேர்தலில் எவ்வாறு வைப்பது; சத்யியபிரதா சஹூ விளக்கம்..

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஒரே நேரத்தில் வாக்குச் சாவடியில் விரல் மை வைப்பதில் பல்வேறு குழப்பம் இருந்து வந்தது. அதனை தீர்க்கும் வண்ணம் இன்று செய்தியாளர்களிடன் தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி, ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வழக்கம் போல் விரல் மை வைக்கப்படும் என்றாலும் மக்களவை தவிர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் வழக்கமான நடைமுறையே மை வைப்பதில் கடைபிடிக்கப்படும்.. அதே சமயம், மே மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் வக்களித்தமைக்கான மை வைக்கப்படும் எனத் தெரிவித்தார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.