சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5ஆயிரத்து 325 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 83 ஆயிரத்து 191 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5ஆயிரத்து319 நபர்களுக்கும், ஆந்திரா மற்றும் பிகாரிலிருந்து தமிழ்நாடு வந்த தலா இரண்டு நபர்களுக்கும், கேரளா, கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 325 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 65 லட்சத்து 19 ஆயிரத்து 891 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில், 46 ஆயிரத்து 249 நபர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5ஆயிரத்து 363 நபர்கள் இன்று(செப்.23) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் பலனின்றி 63 பேர் மேலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா மொத்த பாதிப்பு:
- சென்னை - 1,58,594
- செங்கல்பட்டு- 33,327
- திருவள்ளூர் - 30800
- கோயம்புத்தூர்- 27,744
- காஞ்சிபுரம் - 21,008
- கடலூர் - 18,717
- மதுரை -16,103
- சேலம் - 17,379
- தேனி - 14408
- விருதுநகர் - 14143
- திருவண்ணாமலை - 14563
- வேலூர் - 13,889
- தூத்துக்குடி - 13071
- ராணிப்பேட்டை- 12,872
- திருநெல்வேலி- 12081
- கன்னியாகுமரி - 12,077
- விழுப்புரம் - 10721
- திருச்சிராப்பள்ளி - 9858
- தஞ்சாவூர் - 9836
- கள்ளக்குறிச்சி - 8887
- திண்டுக்கல் - 8545
- புதுக்கோட்டை - 8424
- தென்காசி - 6961
- ராமநாதபுரம் - 5411
- திருவாரூர் - 6409
- திருப்பூர் - 6836
- ஈரோடு - 5889
- சிவகங்கை - 4922
- நாகப்பட்டினம் - 4906
- திருப்பத்தூர் - 4505
- நாமக்கல் - 4487
- கிருஷ்ணகிரி - 3991
- அரியலூர் - 3,548
- நீலகிரி - 3267
- கரூர் - 2724
- தருமபுரி - 3118
- பெரம்பலூர் - 1698
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 928
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428