மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்டோபர் 13) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக 83 ஆயிரத்து 803 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் மூலம், கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் 4 ஆயிரத்து 666 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை 82 லட்சத்து 46 ஆயிரத்து 830 நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டனர். இதன் மூலம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 நபர்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதித்திருந்தது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் 43 ஆயிரத்து 239 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 117 இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், 38 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் என 57 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
சென்னை - 1,84,429
செங்கல்பட்டு - 39,870
கோயம்புத்தூர் - 37,919
திருவள்ளூர் - 35,179
காஞ்சிபுரம் - 23,799
சேலம் - 23915
கடலூர் - 21,793
மதுரை - 17,636
திருவண்ணாமலை - 16,730
வேலூர் - 16,500
தேனி - 15,750
விருதுநகர் - 14,924
ராணிப்பேட்டை - 14.246
தூத்துக்குடி - 14,236
கன்னியாகுமரி - 13,927
தஞ்சாவூர் - 13,984
திருநெல்வேலி - 13,633
விழுப்புரம் - 12,712
திருச்சிராப்பள்ளி - 11,497
திருப்பூர் - 10,367
புதுக்கோட்டை - 9,998
கள்ளக்குறிச்சி - 9,753
திண்டுக்கல் - 9,409
திருவாரூர் - 8,621
ஈரோடு - 8,527
தென்காசி - 7,661
நாமக்கல் - 7,417
நாகப்பட்டினம் - 5,952
ராமநாதபுரம் - 5,777
திருப்பத்தூர் - 5,842
சிவகங்கை - 5,543
கிருஷ்ணகிரி - 5,671
நீலகிரி - 5,635
தருமபுரி - 4,806
அரியலூர் - 4,161
கரூர் - 3,632
பெரம்பலூர் - 2,005
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கட்டுப்பாட்டிற்கு வருகிறதா கரோனா; இரண்டு மாதங்களில் குறைவான பாதிப்பு