இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டிலுள்ள 149 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து 6 ஆயிரத்து 326, பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய 26 நபர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 352 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 52 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 ஆயிரத்து 045 நபர்கள் குணமடைந்த வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 137ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்துடன் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு விவரங்கள்:
சென்னை - 1,285
செங்கல்பட்டு - 306
திருவள்ளூர் - 284
மதுரை- 115
காஞ்சிபுரம் - 241
விருதுநகர் - 126
தூத்துக்குடி - 89
திருவண்ணாமலை - 152
வேலூர் - 178
திருநெல்வேலி - 154
தேனி - 125
ராணிப்பேட்டை -151
கன்னியாகுமரி - 161
கோயம்புத்தூர் - 491
திருச்சிராப்பள்ளி- 102
கள்ளக்குறிச்சி - 82
விழுப்புரம் - 171
சேலம் - 432
ராமநாதபுரம் - 35
கடலூர்- 420
திண்டுக்கல் - 129
தஞ்சாவூர் - 134
சிவகங்கை - 35
தென்காசி - 75
புதுக்கோட்டை - 124
திருவாரூர் - 102
திருப்பத்தூர் - 30
அரியலூர் - 60
கிருஷ்ணகிரி -40
திருப்பூர் -100
தருமபுரி - 18
நீலகிரி - 17
ஈரோடு - 156
நாகப்பட்டினம் - 101
நாமக்கல் - 70
கரூர் - 30
பெரம்பலூர் - 19
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 6
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 6
இதையும் படிங்க: அண்ணாநகரில் 15 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு