ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,996; உயிரிழப்பு - 102

COVID-19 status
கரோனா பாதிப்பு நிலவரம்
author img

By

Published : Aug 28, 2020, 8:08 PM IST

Updated : Aug 28, 2020, 10:43 PM IST

17:50 August 28

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 996 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆகஸ்ட் 28) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 73 ஆயிரத்து 186 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 979, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 17 நபர்கள் என 5 ஆயிரத்து 996 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 44 லட்சத்து 20 ஆயிரத்து 697 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 238 நபர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 52 ஆயிரத்து 506 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 752 நபர்கள் வீட்டுக்கு இன்று(ஆக.28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 102 பேர்  இறந்துள்ளனர். 

தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 050ஆக உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.56 மணிக்கு இறந்த வசந்தகுமார் எம்பி குறித்து தகவல் இடம்பெறவில்லை. முன்னதாக, கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6.56 மணிக்கு இறந்தார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 1,31,869

செங்கல்பட்டு - 25,058

திருவள்ளூர் - 23,926

காஞ்சிபுரம் - 16,703

மதுரை - 13,788

கோயம்புத்தூர் - 13,897

விருதுநகர் - 12,433

தேனி - 12,293

தூத்துக்குடி - 11,112

வேலூர் - 10,320

கடலூர் - 10,334

ராணிப்பேட்டை - 10,069

திருவண்ணாமலை - 9,988

சேலம் - 9,815

கன்னியாகுமரி - 9,175

திருநெல்வேலி - 9,148

திருச்சிராப்பள்ளி - 7,158

விழுப்புரம் - 6896

திண்டுக்கல் - 6,218

தஞ்சாவூர் - 6,238

புதுக்கோட்டை - 5,751

கள்ளக்குறிச்சி - 5,708

தென்காசி - 5,157

ராமநாதபுரம் - 4,628

சிவகங்கை - 3,962

திருவாரூர் - 3,276

திருப்பத்தூர் - 2,759

ஈரோடு - 2735

அரியலூர் - 2,519

திருப்பூர் - 2,458

நாகப்பட்டினம் - 2,339

கிருஷ்ணகிரி - 2,006

நாமக்கல் - 1,917

நீலகிரி - 1,536

கரூர் - 1,454

பெரம்பலூர் - 1,249

தருமபுரி - 1,200

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 904

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 814

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது - மருத்துவமனை தகவல்
 
Last Updated : Aug 28, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.