ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்றைய கரோனா நிலவரம்: ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு!

TN corona status today-
தமிழ்நாட்டில் இன்றைய கரோனா நிலவரம்
author img

By

Published : Aug 7, 2020, 6:09 PM IST

Updated : Aug 7, 2020, 9:42 PM IST

18:05 August 07

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 880 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இன்று (ஆகஸ்ட் 7) கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவல்களில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டிலுள்ள 126 பரிசோதனை நிலையங்களில் புதிதாக 65 ஆயிரத்து 189 நபர்களுக்கு சளி, ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்து 856, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 24 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 880 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 29 லட்சத்து 75 ஆயிரத்து 657 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 24 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 52 ஆயிரத்து 759 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 6 ஆயிரத்து 488 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில், சிகிச்சை பலனின்றி 119 பேர் இன்று மட்டும் உயிரிழந்தனர். இதையடுத்து தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயரித்து 690ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 984 பேருக்கு கரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், ஆயிரத்து 103 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரங்கள்:

சென்னை - 1,07,109

செங்கல்பட்டு - 17,227

திருவள்ளூர் - 16,220

மதுரை - 11,797

காஞ்சிபுரம் - 11, 174

விருதுநகர் - 9,542

தூத்துக்குடி - 8,648

திருவண்ணாமலை - 7,312

வேலூர்  - 7,056

தேனி - 7,188

ராணிப்பேட்டை - 6,597

திருநெல்வேலி - 6,265

கோயம்புத்தூர் - 6.227

கன்னியாகுமரி - 6,015

திருச்சிராப்பள்ளி - 4,939

விழுப்புரம் - 4,390

கள்ளக்குறிச்சி - 4,270

சேலம் - 4,420

கடலூர் - 4,445

ராமநாதபுரம் - 3,546

தஞ்சாவூர் - 3,701

திண்டுக்கல் - 3,465

சிவகங்கை - 2,832

புதுக்கோட்டை - 2,928

தென்காசி - 2,748

திருவாரூர் - 1,919

திருப்பத்தூர் - 1,498

கிருஷ்ணகிரி - 1,310

அரியலூர் - 1,205

திருப்பூர் - 1,089

நாகப்பட்டினம் - 999

நீலகிரி - 931

நாமக்கல் - 924

தருமபுரி - 830

ஈரோடு - 955

கரூர் - 706

பெரம்பலூர் - 641

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 853

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 677

ரயில் மூலம் வந்தவர்கள் - 426

இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

Last Updated : Aug 7, 2020, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.