தமிழ்நாட்டில் 19,372 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், 20 ஆய்வகங்கள் மூலம் 12,746 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 827 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வந்த 117 நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பூரண குணமடைந்த 639 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,548 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பலனின்றி உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 559 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -12,762
- செங்கல்பட்டு -933
- திருவள்ளூர் -863
- கடலூர் -443
- அரியலூர் -362
- காஞ்சிபுரம் -349
- விழுப்புரம் -332
- திருநெல்வேலி -330
- திருவண்ணாமலை -304
- மதுரை -249
- கள்ளக்குறிச்சி -223
- தூத்துக்குடி -198
- கோயம்புத்தூர் -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -138
- விருதுநகர் -119
- திருப்பூர் -112
- தேனி -108
- சேலம் -107
- ராணிப்பேட்டை -97
- தஞ்சாவூர் -86
- தென்காசி -83
- கரூர் -80
- திருச்சிராப்பள்ளி -79
- நாமக்கல் -76
- ஈரோடு -71
- ராமநாதபுரம் -65
- கன்னியாகுமரி -59
- நாகப்பட்டினம் -54
- திருவாரூர் -42
- வேலூர் -42
- திருப்பத்தூர் -32
- சிவகங்கை -31
- கிருஷ்ணகிரி -26
- புதுக்கோட்டை -22
- நீலகிரி -13
- தருமபுரி -8