முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில்,

”முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த கட்சியினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.