ETV Bharat / state

'மீன்வள மசோதா 2021' நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - மீன்வள மசோதா 2021

stalin
இந்திய கடல்சார் மீன்வள மசோதா
author img

By

Published : Jul 20, 2021, 9:50 PM IST

Updated : Jul 20, 2021, 10:03 PM IST

21:37 July 20

இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ, நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டாம் எனப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரின்போது ஒன்றிய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுகிறது

அதில், "ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின்கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உள்பிரிவுகளைக் கொண்டுள்ளது.  

மசோதாவைத் தாக்கல்செய்ய வேண்டாம்

மேலும், மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் (Criminalisation), சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் (Use of force), கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உள்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம், ஆலோசனைகள் நடத்திய பிறகு அவர்களின் கருத்துகளைப் பெற்று மீனவர் நலன்காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல்செய்யலாம்.  

தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய கடல்சார் மீனவர் மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jul 20, 2021, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.