ETV Bharat / state

சென்னை மாநகரப் பகுதியில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மாநகரப் பகுதியில் கரோனா பராமரிப்பு மையத்தில் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளை கூடுதலாக அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

MKS
MKS
author img

By

Published : May 7, 2021, 10:25 PM IST

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் கரோனா பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) நேரில் பார்வையிட்டார். இந்த மையத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வரும் 300 படுக்கைகள் மே 10ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. மேலும் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்தும், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்தும், இந்த மையத்திற்கான மருத்துவர்களும் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மையத்திற்கான உணவு மற்றும் பராமரிப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும். இந்த ஆய்வின் போது, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரகத் தொழிற் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.