சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும், காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் ரூ. 100 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் 26,482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
அதே போன்று புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டு வட்டம், வேண்பாக்கத்தில் ரூ. 119 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில், 27,062 சதூ மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (அக். 23) காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...தேவர் தங்கக் கவசத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஓபிஎஸ்!