இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய கோட்டைக் கொத்தளத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.
பின்னர், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறார். அதன்படி, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதும், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதும், கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த திருநெல்வேலி கடையத்தைச் சேர்ந்த மூத்தத் தம்பதியினருக்கு, அதி தீர வீரச்செயலுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சிவனைத் தவிர, ரம்யா லட்சுமிக்கும், நெல்லைத் தம்பதியினருக்கும் விருதுகனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், முதலமைச்சரின் சிறந்த நல் ஆளுமைக்கான விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன.
Intro:Body:
*73வது சுதந்திர தினம்...கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்..*
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய கோட்டைக் கொத்தளத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார். இந்த உரையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோருக்கு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக முதல்வரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்கிறார்.பின்பு தரைப்படை, கடற்படை, விமானபடை உள்ளிட்ட அதிகாரிகளை முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். அதன்பின் காவல் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு தேசிய பாதுகாப்பு படை, தமிழக பேரிடர் மீட்பு படை, கேரள மாநில காவல்படை படை, பெண்கள் கமாண்டோ படை, தமிழக சிறப்பு காவல்படை, ஆண்கள் கமாண்டோ படை, சென்னை மாநகர பெண்கள் காவல்படை, தமிழக காவல் இசை குழு மற்றும் குதிரைப்படை ஆகியோரின் அணி வகுப்புகளை பார்வையிடுகிறார்.
சுதந்திர தின உரையை நிகழ்த்திய பின், பல்வேறு விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.அப்துல்கலாம் விருது, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது போன்ற பெயரிலான விருதுகளை, உரியோருக்கு முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இந்த ஆண்டு, கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த, திருநெல்வேலி கடையத்தைச் சேர்ந்த மூத்த தம்பதியினருக்கு, அதி தீர வீரச்செயலுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வரி நல் ஆளுமைக்கான விருது, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும், 16 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கான விருதை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொள்கின்றனர்.
அதேப்போன்று பதிவுத்துறைக்கான விருதை, அமைச்சர் கே.சி.வீரமணியும், காவல்துறைக்கான விருதை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பெற்றுக்கொள்கின்றனர்.
*சிறப்பு ஏற்பாடுகள்..*
சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தின் கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சாலையில் பந்தல் போடப்பட்டு அதில் விருது பெறுபவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள்,பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, காலை 9 மணிக்கு, முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்துகிறார்.
பின், விருதுகள், பதக்கங்களை வழங்கி சிறப்பித்த பின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை கண்டு ரசிக்க உள்ளார்.தொடர்ந்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய பின், தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் புறப்பட உள்ளார்.
*போக்குவரத்து மாற்றம்..*
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரை கடற்கரை காமராஜர் சாலையில், போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி வரை வாகனங்கள், பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.பாரிமுனையில் இருந்து, அண்ணா சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக கடற்கரை சாலையை அடைய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
*பாதுகாப்பு ஏற்பாடுகள்..*
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை நகரம் முழுவதும் 12,000 போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், கடற்கரையில் தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேப்போன்று சென்னை தலைமை செயலகத்தில் ஏற்கனவே 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, சுதந்திர தினம் என்பதால் கூடுதலாக 15 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினம் அன்று, எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
*தேனீர் விருந்து..*
கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நிறைவடைந்ததும், நண்பகலில் சென்னையில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் சமபந்தி விருந்து நடைப்பெற உள்ளது. இந்த விருந்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளிக்கிறார். இதற்கான அழைப்பிதழும் ஆளுநர் மாளிகையில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion: