ETV Bharat / state

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

TN CM announced Semester exam for Arts and science college cancelled
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Jul 23, 2020, 9:16 AM IST

Updated : Jul 23, 2020, 10:20 AM IST

09:10 July 23

சென்னை: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்குத் தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக, அந்தக் குழு தன்னுடைய பரிந்துரையைத் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும். 

முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும்,  பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

அதேபோன்று, எம்.சி.ஏ. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்குச் செல்ல அனுமதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பான விரிவான ஒரு அரசாணையை வெளியிடவும் உயர்கல்வித் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் - தங்கம் தென்னரசு

Last Updated : Jul 23, 2020, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.