ETV Bharat / state

ரூ. 3.46 கோடி மதிப்பிலான கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஈரோடு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில்களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

TN Chief Minister inaugurated buildings worth Rs 3.46 crore

author img

By

Published : Dec 7, 2020, 5:44 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணோலி மூலம் திறந்து வைத்த கட்டடங்களின் விவரங்கள் பின்வருமாறு:

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் 2,944 சதுர அடி பரப்பளவில் 68 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளைப்பாறும் மண்டபம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் 6,283 சதுர அடி பரப்பளவில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன முடிகாணிக்கை மண்டபம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர், அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயிலில் 2,605 சதுர அடி பரப்பளவில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் மற்றும் நகர், அருள்மிகு அவிநாசிலிங்கேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2,604 சதுர அடி பரப்பளவில் 65 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 4,050 சதுர அடி பரப்பளவில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணை ஆணையர் / செயல் அலுவலர் அலுவலகக் கட்டடத்தின் முதல் தளம் என மொத்தம் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டாக்டர் சு.பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.