ETV Bharat / state

முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு! - ஊழியரை தேடும் போலீசார்,

சென்னை: வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

chennai petrol bomb blast
author img

By

Published : Oct 5, 2019, 5:47 PM IST

சென்னை வேளச்சேரி காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் போஸ் (30) - பாக்கியம் தம்பதியினர். போஸ் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வேலை பார்த்துவந்த மணிக்கும்(22) அதே பகுதியைச் சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதனைக் கண்ட போஸ் இருவரையும் விலக்கிவிட்டு தன்னிடம் வேலை பார்த்து வந்த மணியை கண்டித்துள்ளார்.

முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

உரிமையாளர் தனக்குச் சாதகமாக பேசாத ஆத்திரத்தில் இருந்த மணி, நான்கு நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த மணி இன்று அதிகாலை, போஸின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் தீ பற்றி புகை அதிகாமாக, விழித்துக் கொண்ட போஸ் மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய இருவரும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போஸின் மனைவி பாக்கியம் இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மணியை வலைவீசித் தேடிவருகின்றனர்.

Intro:Body:*சென்னை - முதலாளி வீட்டில் ஊழியர் பெட்ரோல் குண்டு வீச்சு, காவல்துறை விசாரணை*

மூன்றாவது நபருடன் ஏற்பட்ட சண்டையில் தனக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் போஸ்(30) மற்றும் பாக்கியம் தம்பதியினர். போஸ் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் வேலை பார்த்து வந்த மணிக்கும்(22) அதே பகுதியைச் சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதைப் பார்த்த போஸ் அவர்களை விலக்கிவிட்டு தன்னிடம் வேலை பார்த்து வந்த மணியை கண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக வேலைக்கு வராத மணி, தனக்கு சாதகமாக பேசாத முதலாளியின் மேலுள்ள ஆத்திரத்தில் இன்று அதிகாலை அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினார். பெட்ரோல் குண்டு வெடித்து தீபற்றி புகை அதிகாமாகவே விழித்துக் கொண்ட போஸ் மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய இருவரும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து போஸின் மனைவி பாக்கியம் இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மணியை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.