lதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நாகப்பட்டினம் தொகுதி, நாகூர் பட்டினச்சேரி, வெட்டாற்று வடகரையின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வருமா என்று நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்," நாகப்பட்டினம் தொகுதி, நாகூர் பட்டினச்சேரி, வெட்டாற்று வடகரையின் முகத்துவாராத்தில், 360 அடி நீளத்துக்கு சுவர் 20 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையைப் பொறுத்தவரை, பொதுவாக தமிழ்நாடு அரசு சார்பாக குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.
ஆனால், அதிமுக அரசு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போன்று, இந்த அரசு சார்பாக ஆண்டுக்கு மீனவர்களுக்கு நேரடியாக 19 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். மீன்வளத்துறை சார்பாக, தமிழ்நாடு அரசு ஒரு குழு அமைத்து உள்ளது.
இந்தக் குழுவானது மீனவர்களின் பிரச்சினைகள், அவர்களுக்கு எந்தமாதிரியான திட்டங்கள் அறிவிக்கலாம் என்பன போன்று தொடர்ந்து கண்காணித்து தமிழ்நாடு அரசுக்கு தங்கள் அறிக்கைகளை கொடுத்து வருகின்றது. மீனவர்கள் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாடு என அனைத்திலும் வளருவதற்கு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட நிதியில் 50 சதவீதம் நிதி கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பகுதிகளில் மீனவர்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கி, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார்.
இதையும் படிங்க: எந்தெந்தத் தேதிகளில் எந்தெந்தத் துறைகள்?: மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை